”நீங்கதான் நாளைய வாக்காளர்கள்” – மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய்!

(Visited 27 times, 1 visits today)
நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முதற்படியை அவர் எடுத்துவைத்துள்ளார்.
இதன்படி இன்று சென்னை நீலாங்கரையில் மாணவர்கள் முன்னிலையில் பல்வேறு விடயங்கள் பற்றி பேசிய விஜய் மாணவர்களை பார்த்து நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர், வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில். டொக்டர் அம்பேத்கார் பற்றி, காமராஜர் பற்றி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், ”முன்பு உன்னுடைய நண்பர் யார் என்று கூறு , நீ யார் என்று சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது நீங்கள் எந்த சோசியல் மீடியாவை ஃபோலோ செய்கிறாய் என்று சொல்லுங்கள், நீஙகள் யார் என்று சொல்கிறேன்.
நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். நம் விரலை வைத்து நம் கண்ணையே குத்துவதை கேள்விப்பட்டுள்ளீர்களா?. அதுதான் தற்போ நடந்துக்கொண்டிருக்கிறது. அதைதான் நாம் செய்துக் கொண்டிருக்கிறோம்.
சற்று சிந்தித்து பாருங்கள் தற்போது வாக்கிற்காக ஒருவர் ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார் என்றால், ஒரு தொகுதிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு தொகுதிக்கு ஏறக்குறைய 15 கோடி ரூபாயாகுகிறது. அப்படியென்றால் அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஆகவே இனிமேல் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் என்பதை உங்கள் பெற்றோருக்கு சொல்லிக்கொடுங்கள். இது எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போதுதான் உங்கள் கல்விக்கான வெற்றியே கிடைக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) June 17, 2023
@actorvijay quotes @dhanushkraja's Asuran Movie dialogue about education
#CaptainMiller pic.twitter.com/cV1AnszuDa
Notifications