பொழுதுபோக்கு

8 கோடி நஷ்டஈடு வழங்கியது தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?

கோலிவுட் திரையுலகில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் டி.ராஜேந்தர்.

தன்னுடைய திரைப்படங்களில் ரசிகர்களே மலைத்து போகும் அளவுக்கு அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.

அதே போல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிம்புவின் தந்தையாவார்.

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ள டி.ராஜேந்தருக்கு தமிழக அரசு சுமார் 8 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கலையுலகில் சம்பாதித்த பணத்தை, பல்வேறு தொழிகளிலும் இவர் முதலீடு செய்துள்ளார்.

அதில் முக்கியமாக இவருக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சொந்த திரையரங்கங்களும் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், டி. ராஜேந்தருக்கு சொந்தமாக வேலூரில் திரையரங்கம் ஒன்று இயக்கி வந்தது.

T. Rajendar Interview | புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகள் -டி.ராஜேந்தர் ...

போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடத்தில் இந்த திரையரங்கம் செயல்பட்டு வந்ததால், அப்பகுதி மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் மேம்பாலம் அமைத்து கொடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில், மேம்பாலம் கட்ட டி. ராஜேந்தரின் திரையரங்கம் இருக்கும் இடம் தேவைப்பட்டது.

மேலும் மேம்பாலம் அமைத்து கொடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில், மேம்பாலம் கட்ட டி. ராஜேந்தரின் திரையரங்கம் இருக்கும் இடம் தேவைப்பட்டது.

இது தொடர்பாக அவருக்கு தமிழக அரசு சார்பில் நோட்டீஸும் அனுப்பிய நிலையில், இதையடுத்து டி. ராஜேந்தர் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தன்னுடைய திரையரங்கம் அமைந்திருந்த 527 சதுர மீட்டர் நிலத்தை, மேம்பாலம் கட்ட கிரயம் செய்து கொடுத்தார்.

இதற்காக அரசு சார்பில் அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

T Rajendar | Successive hits - Who gave the most in Tamil cinema?

நடிப்பை தாண்டி அரசியலிலும் களம் கண்டவர் டி.ராஜேந்தர்.

ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவங்கிய இவர், பின்னர் திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார்.

பின்னர் 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்