உலகளாவிய ரீதியில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த இருபது வருடங்களில் முதன்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 160 மில்லியன் சிறுவர்கள், தொழிலாளியாக இருப்பதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக 80 மில்லியன் சிறார்கள் உடல் மற்றும் உள ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
வறுமையின் பொருட்டு சிறார்கள் வேலைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான வழி வயது வந்தவர்கள் தொழில்புரிவது மட்டுமே என்று தெரிவித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு இதன் ஊடாக சிறார்கள் பாடசாலைக்கு செல்லும் வீதத்தையும் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)