சிங்கப்பூரில் வேலை செய்த இடத்தில் கைவரிசை காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் 2 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 வயதுடை ஊழியரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வல்லிச் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில், விலையுயர்ந்த கைக்கடிகாரம் திருடப்பட்டது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, உடற்பயிற்சி கூடத்தின் ஊழியரான ஹோவர்ட் லாம் வென் ஜுன் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் இரண்டு தனித்தனி சம்பவங்களில் சுமார் 173,000 சிங்கப்பூர் டொலர் மதிப்புள்ள இரண்டு கடிகாரங்களை திருடியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் கைதான பிறகு அந்த இரண்டு கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன. கடந்த ஜூன் 13ஆம் திகதியன்று, குற்றம் சாட்டப்பட்ட ஊழியருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.