கடும்காட்டுத் தீ தொடரும் மரணங்கள்- கஜகஸ்தானில் துயரம்
கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயின் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய ஆசிய நாடுகளில் காட்டுத்தீயினால் அதிக மரணம் ஏற்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயினால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
வேகமாக பரவிவரும் தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள், இராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என 1,000 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
காட்டுத்தீயில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.