இலங்கை

வைத்தியசாலையில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் தட்டுப்பாட்டினால் மருத்துவர்கள் இன்சுலினை வெளியில் வாங்குமாறு தெரிவிப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  தேசிய வைத்தியசாலைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ நாட்டில் தற்போது குரங்கம்மை தொற்றுக் குறித்த எவ்வித அச்சுறுத்தலுமில்லை என்பதால் வைரஸ் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை வைரஸ் இலங்கையில் தோன்றியதல்ல என்பதால் இது சமூக பரவலை ஏற்படுத்தும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்து அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!