தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நட்சத்திரங்கள்!
தமிழக அரசு 2014 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்திற்கான திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகியவை சிறந்த திரைப்படங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
கலைத்துறை சாதனையாளர்களுக்கு தங்கப் பதக்கங்கள், ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு விருதுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த உயரிய விருதுகளைத் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் விழாவில் வழங்கிவைப்பார்
கலைத்துறையில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டுவதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமாகும்.





