தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்றுடன் மோதிய லொறி – 11 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவில் சிறிய பேருந்து ஒன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் கிழக்கு குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் உள்ள டர்பன் (Durban) அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜோகன்னஸ்பர்க் அருகே ஒரு லொறி மற்றும் மினிபஸ் டாக்ஸி மோதிய விபத்தில் 14 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





