இலங்கையில் 15000 ரூபாவால் அதிகரித்த தங்கத்தின் விலை!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 5500 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்களின் கூற்றுப்படி, 24 காரட் பவுண் ஒன்றின் விலை 15,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 காரட் பவுணின் விலை 420,000 ஆகவும், 22 காரட் தங்க பவுனின் விலை 386,400 ஆகவும் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5500 டொலராக பதிவு!





