அடுத்த மாதம் இஸ்ரேல் செல்ல உள்ள இந்திய பிரதமர் மோடி
இரு நாடுகளுக்கும் இடையே வேகமாக விரிவடைந்து வரும் மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) பிப்ரவரியில் இஸ்ரேலுக்கு(Israel) விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார்(Reuven Azar) தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருகை தருமாறு முறையாக அழைத்துள்ளதாகவும் விரைவில் பயணத்தை எளிதாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரூவன் அசார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த பயணத்தின் போது விவசாயம், நீர் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் ஆலோசிக்க உள்ளதாக நம்பப்படுகிறது.
சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்(S. Jaishankar) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்(Piyush Goyal) இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டனர்.





