
மறைந்த பழம்பெரும் நடிகர் முரளியின் நினைவாகவும், அவரது கிளாசிக் படமான ‘இதயம்’ படத்தின் தாக்கத்தோடு உருவாகி வரும் திரைப்படம் ‘இதயம் முரளி’. என பெயரிட்டு அது மட்டுமல்லாது நடிகர் அதர்வா முரளி நடிப்பாத்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது தற்போது இப்படத்திலிருந்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முதல் மெலோடி பாடலான ‘இதயா’ ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள்
“தங்கமே தங்கமே” இன்று (ஜனவரி 28, 2026) வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் (S. Thaman) இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு அழகான காதல் மெலோடியை வழங்கியுள்ளார்.

மறைந்த நடிகர் முரளிக்குத் திரையுலகம் சூட்டிய புகழ்பெற்ற பெயரான ‘இதயம் முரளி’ என்பதையே தனது மகனின் படத்திற்குத் தலைப்பாக வைத்தது ரசிகர்கள் மத்தியில் ஒரு நெகிழ்ச்சியான எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இப்படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ளனர். மேலும் நட்டி நடராஜ், ரக்சன், நிஹாரிகா என்.எம். மற்றும் ‘பரிதாபங்கள்’ சுதாகர் – திராவிட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘டான் பிக்சர்ஸ்’ (Dawn Pictures) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

காதல் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள ‘இதயம் முரளி’, வரும்
மே 31, 2026 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வெளியாகவுள்ள “தங்கமே தங்கமே” பாடல் இந்த ஆண்டின் டாப் மெலோடி வரிசையில் இடம்பிடிக்கும் என தமன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.