இங்கிலாந்து பாடசாலைகளில் “மொபைல் தடை” – அரசின் கடுமையான உத்தரவு
இங்கிலாந்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என பிரிட்ஜெட் பிலிப்சன்
(Bridget Phillipson)தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாட நேரங்களில் மட்டுமின்றி இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் கையடக்கத் தொலைபேசிகளை
பயன்படுத்த அனுமதி இல்லை என பிரிட்ஜெட் பிலிப்சன் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசிகளை கால்குலேட்டர் அல்லது பாடங்களுக்கான ஆராய்ச்சி கருவியாக பயன்படுத்துவதும் பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.
இனிவரும் காலங்களில் பாடசாலைகள் தங்களின் கைடயக்கத் தொலைபேசி கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை இங்கிலாந்தில் பாடசாலைகள்
கல்லூரிகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும் அரசாங்க அமைப்பான
ஆஃப்ஸ்டெட் (Ofsted) ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களும் மாணவர்கள் முன்னிலையில் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாடசாலைகளின் கையடக்கத் தொலைபேசிகளின் கொள்கைகளை கண்காணிக்க Ofsted ஐ பயன்படுத்துவது தவறான முடிவு என்றும்,
நடைமுறைசாத்யமற்றது என்றும் தலைமை ஆசிரியர் சங்கமொன்று விமர்சித்துள்ளது.





