”ஈரான் எந்தவொரு தாக்குதலையும் முழுமையான போராக கருதும்” – அமெரிக்காவிற்கு பதிலடி!!
ஈரான் எந்தவொரு தாக்குதலையும் “எங்களுக்கு எதிரான முழுமையான போராக” கருதும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் நாட்களில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ கப்பல் மற்றும் குழுவினர் நிலைநிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவ் அதிகாரி, “இந்த இராணுவக் குவிப்பு – இது உண்மையான மோதலுக்காக அல்ல என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்கள் இராணுவம் மோசமான சூழ்நிலைக்கு தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை எந்தவொரு தாக்குதலையும் எங்களுக்கு எதிரான முழுமையான போராகக் கருதுவோம், மேலும் இதைத் தீர்க்க நாங்கள் கடினமான வழியில் பதிலளிப்போம் என்றும் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஈரான்மீது அமெரிக்கா கழுகுப்பார்வை: வளைகுடா நோக்கி நகரும் படை!





