இந்தோனேசியாவில் மண்சரிவு: எழுவர் பலி! 82 பேர் மாயம்!!
இந்தோனேசியாவில் , கிராம பகுதியொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி எழுவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் West Java province மேற்கு பண்டுங் West Bandung பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று (24) சனிக்கிழமை இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. காணாமல்போயுள்ளவர்களில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மழையுடன்கூடிய வானிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஆச்சே Aceh , வடக்கு சுமத்ரா மற்றும் மேற்கு குமத்ரா மாகாணங்களில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.





