கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல் ஒன்றை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா – இருவர் பலி!
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் படகின் மீது அமெரிக்க இராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தெற்கு கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் தப்பித்துள்ளதாகவும், அவரை தேடும் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தப் பகுதியில் அமெரிக்கா நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குல் இதுவாகும்.





