ட்ரம்பின் எச்சரிக்கை : ஈரானில் அடுத்து நிகழப்போவது என்ன?
ஈரானில் அமெரிக்க இராணுவத் தலையீடு 24 மணி நேரத்திற்குள் நிகழக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஜனவரி 13 ஆம் திகதி ஐரோப்பிய தலைவர்கள் ரொய்டர்ஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குறித்த செய்தியில், அங்கு உடனடி மோதலுக்குத் ஏற்ற சூழ்நிலைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொன்ற மிருகத்தனமான அடக்குமுறையை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர சூழ்நிலை அறை கூட்டங்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை கத்தார் விமானத் தளங்களில் இருந்து பணியாளர்களை வெளியேற்றியது மற்றும் பாரசீக வளைகுடாவை நோக்கி USS ஆபிரகாம் லிங்கன் கேரியர் தாக்குதல் குழுவிற்கு உத்தரவிட்டதாகவும் இந்த சூழ்நிலைகள் அந்நாட்டில் அமெரிக்காவின் பிரசன்னம் அதிகரிக்க வாய்ப்புள்ளதை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த வாரத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது ட்ரம்ப் மீதான கொலை முயற்சி அடங்கிய காணொளியை ஈரான் வெளியிட்டு குறி தப்பிவிட்டது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், “நான் அறிவிப்பை விட்டுவிட்டேன், ஏதாவது நடந்தால்… முழு நாடும் வெடிக்கப் போகிறது. நான் அவர்களை மிகவும் கடுமையாக தாக்குவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் குடிமக்களை தூக்கிலிடத் தொடங்கியிருந்தால் நிகழ்வுகள் அணு ஆயுத மட்டத்திற்கு அதிகரித்திருக்கலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





