அமெரிக்கா முழுவதும் வீசும் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு!
அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்று தொடங்கும் பனிப்புயலானது வார இறுதி முழுவதும் வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நியூ மெக்ஸிகோவிலிருந்து கரோலினாஸ் வரையிலான பகுதிகள் மற்றும் வொஷிங்டன், டி.சி., பிலடெல்பியா, நியூயார்க் நகரம் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால் பரவலான மின் தடைகள் ஏற்படும் என்றும் முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.





