நாயால் நடிகைக்கு வந்த சோதனை!
நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிரபல நடிகை Deena Sravya சர்ச்சை புயலில் சிக்கியுள்ளார்.
அவரின் இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் நடவடிக்கையாகும். எனவே, அவர் உடன் மன்னிப்பு கோர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் ஆரம்பமாகியுள்ளது.
எனினும், மன்னிப்பு கோராமல் தனது தாயார் ஊடாக விளக்க அறிக்கையொன்றை விடுத்துள்ளார் சம்பந்தப்பட்ட நடிகை.
சரி அப்படி என்னதான் நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
தெலங்கானாவில் உள்ள மேடாரம் பகுதியில் சம்மக்கா-சாரக்கா அம்மன் திருவிழா வெகு பிரசித்தி பெற்றதாகும்.
இவ்விழா எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்தி கடனாக அம்மனுக்கு வெல்லத்தை எடைக்கு எடை துலா பாரம் செலுத்துவது ஐதீகம்.
இப்பண்டிகையை கொண்டாட தெலங்கானா அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
இவ்வளவு பிரசித்தி பெற்ற அம்மன் விழாவிற்கு “கமிட்டி குர்ரோள்ளு’ ‘ப்ரீ வெட்டிங் ஷோ’ ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை யான டீனா ஸ்ரவ்யாDeena Sravya , தனது தாயார் மற்றும் நாய்க்குட்டியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர், தனது செல்ல நாய்க்குட்டிக்கு எடைக்கு எடை வெல்லத்தை நேர்த்தி கடன் செலுத்தினார்.
இது தற்போது விவாதமாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியதால், பக்தர்கள் நடிகையின் செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
இது குறித்து நடிகை டீனாவின் தாயார் விளக்கம் வழங்கியுள்ளார்.
“ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிகளை தங்களின் பிள்ளைகளை போல் பாவித்து வளர்த்து வருவர். அதுவும் அந்த வீட்டின் ஒரு உறுப்பினர்தான்.
அதனால் தான் அதற்கு சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் போனது. அதனால் தான் அம்மனுக்கு எடைக்கு எடை வெல்லம் கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தினோம்.
இதனை பெரிது படுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
எனினும், இது கோயிலையும், இந்து கலாச்சாரத்தையும் அவமானப்படுத்தும் செயல். கண்டிப்பாக இதற்கு நடிகை மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.





