அமெரிக்க வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாது – சுவிட்சர்லாந்தி பிரான்ஸ் ஜனாதிபதி கடும் கண்டனம்
அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து விதிக்கப்படும் புதிய வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இடம்பெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
பிராந்திய இறையாண்மைக்கு எதிராக வரிகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படும்போது, அது மிகவும் கவலைக்கிடமானது என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன், கிரீன்லாந்தை சொந்தமாக்கும் தனது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை அறிவித்திருந்தார்.
கிரீன்லாந்து தேசியமும் உலகளாவிய பாதுகாப்புக்கும் முக்கியமானது என்றும், தனது திட்டத்திலிருந்து பின்வாங்க முடியாது என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார்.
மேலும், “நீங்கள் கிரீன்லாந்தில் என்ன செய்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்று மக்ரோன் கூறிய செய்தியையும் ட்ரம்ப் பகிர்ந்தார்.
நேட்டோ பொதுச் செயலாளரின் செய்தியையும், கிரீன்லாந்தில் அமெரிக்கக் கொடி பறக்கும் போல உருவாக்கப்பட்ட படங்களையும் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





