இசைஞானிக்கு பத்மபாணி விருது அறிவிப்பு!
இசைஞானி இளையராஜாவுக்கு Musician Ilayaraja பத்மபாணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
11-வது அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பெப்ரவரி 4 வரை மகாராஷ் டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் ஆண்டுதோறும் பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பத்மபாணி விருது தமிழின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் பணப்பிரிசும் வழங்கப்படும்.





