பொழுதுபோக்கு

பராசக்தி பார்த்துவிட்டு பரவசமடைந்த சீமான்!

“தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது.” – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் Naam Tamilar Katchi சீமான் Seeman தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் Sivakarthikeyan, ரவிமோகன் Ravimohan, அதர்வா Atharvaa , ஸ்ரீ லீலா Sri Leela நடிப்பில் கடந்த 10 ஆம் திகதி பராசக்தி Parasakthi படம் வெளியானது.

இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் வேட்டை நடத்திவருகின்றது.

இந்நிலையில், பராசக்தி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.

படம் பார்த்த பின்பு அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

“ தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது.

ஈழத்தில் நாங்கள் எங்கள் தாய் நிலத்தை இழந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக போனோம். ஒரு மொழி தேவை என்றால் கற்று கொள்வோம்.

ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதிகபட்சமாக ஆறு மாதம் ஏழு மாதம் ஆகும். கடந்த 3 தலைமுறைகளாக தாய் மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம்.

தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது.

நமக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வலுக்கட்டாக ஆங்கில சொற்களை சேர்த்து, தங்கிலீஸ் உருவாக்கிவிட்டோம்.

மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை ” என்றார் சீமான்.

அப்போது பராசக்தி படத்தில் வரும் “செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா? ” என்ற கேள்விக்கு, அந்த செழியன் நான்தான் என்று சீமான் பதில் அளித்தார்.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!