ட்ரம்பின் கனவு திட்டத்திற்கு எதிராக கிரீன்லாந்தில் பேரணியாக சென்ற மக்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதித்துள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் நடவடிக்கையை கண்டித்து கிரீன்லாந்து மக்கள் இன்று பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கின் (Nuuk) மையத்தில் தொடங்கிய பேரணியானது அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நிறைவுற்றது.
ட்ரம்ப் உருவாக்கிய “சர்க்கஸின்” ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





