“LPL season-4” அதிரடியாக களமிறங்கினார் சுபாஸ்கரன்
LPL நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகனை Lycaவின் Jaffna Kings உரிமையாளரான அல்லிராஜா சுபாஸ்கரன் கொழும்பில் நேரில் சந்தித்துள்ளார்.
இதன்போது 2023ஆம் ஆண்டுக்கான LPL தொடருக்கு தமது ஆதரவை சுபாஸ்கரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
2021 இல், அவர் லங்கா பிரீமியர் லீக்கின் Jaffna Kings உரிமையை வாங்கியதுடன், அன்றிலிருந்து LPL தொடரில் முக்கிய பங்குதாரராக இருந்து வருகிறார்.
லங்கா பிரீமியர் லீக்கில் 3 சீசன்களிலும் லீக்கை வென்றதன் மூலம் Jaffna Kings மிகவும் வெற்றிகரமான உரிமையை நிரூபித்துள்ளது.
இதையடுத்து, அனில் மோகன், சுபாஸ்கரனின் ஆதரவைப் பாராட்டியுள்ளார்.
“அல்லிராஜா சுபாஸ்கரன் கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கிற்கு ஆதரவாளராக இருந்துள்ளார். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மகத்தான ஆதரவும் லீக்கின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் முக்கியப் பங்காற்றியுள்ளன. இலங்கையில் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில் அவரது பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார்.