மரபணு பிறழ்வுகள் – புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்!
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் மரபணு கோளாறு இனங்காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெல்ஜியத்தின் யுனிவர்சிட்டி லிப்ரே டி ப்ரூக்ஸெல்ஸ் (ULB) விஞ்ஞானிகளுடன் இணைந்து, எக்ஸிடர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (University of Exeter and Belgium’s Université Libre de Bruxelles ) நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட மரபணு கோளாறு இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சீர்குலைப்பதன் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய டிஎன்ஏ (DNA ) வரிசைமுறை மற்றும் ஸ்டெம் செல் ஆய்வுகள் (stem cells) மூலம், TMEM167A மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகள் ஆரம்பத்திலேயே இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை செயலிழக்கச் செய்யும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த TMEM167A பிறழ்வுகள் கால்-கை வலிப்பு அல்லது நரம்பியல் நிலைமைகளை கொண்ட ஆறு குழந்தைகளுக்கு நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டெம் செல்களைப் (stem cells) பயன்படுத்தி மேலும் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த பிறழ்வுகள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சாதாரணமாக செயல்படுவதைத் தடுக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





