பிரதமர் பதவி விலகும்வரை ஓயமாட்டோம்: சஜித் அணி திட்டவட்டம்!
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய விலகும்வரை எமது போராட்டம் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார Rohana Bandara தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது.
இதில் உரையாற்றிய ரோஹன பண்டார எம்.பி.,
“ நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் வரும். பிரதமர் கல்வி அமைச்சில் இருந்து விலகும்வரை எமது போராட்டம் தொடரும்.” – என சூளுரைத்தார்.
அதேவேளை, கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நாட்டில் பல இடங்களில் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.
எனவே, கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் தற்போது போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படமாட்டாது, கல்வி அமைச்சை பிரதமரே வகிப்பார் எனவும் ஆளுங்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.





