உலகம் செய்தி

இறந்த மனைவியை விமானத்தில் ஏற்ற முயன்ற ஸ்பானிஷ் நபர் கைது

ஸ்பெயினில்(Spain) உள்ள டெனெரிஃப் தெற்கு விமான நிலையத்தில்(Tenerife South Airport) 80 வயது முதியவர் ஒருவர், சக்கர நாற்காலியில் தனது மனைவியின் இறந்த உடலை தள்ளிக்கொண்டு விமானத்தில் ஏற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சக்கர நாற்காலியில் இருந்த பெண் பதிலளிக்காமல் இருப்பதையும் அசாதாரண உடல் வெப்பநிலை இருப்பதையும் ஊழியர்கள் கவனித்தபோது ​​பாதுகாப்பு சோதனையில் அந்த நபர் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் கூற்றுப்படி, அவர் இறந்து பல மணி நேரம் ஆகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, அந்த நபர் தனது மனைவி விமான நிலையத்தில் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார், மேலும் அவரது மரணத்திற்கு விமான நிலைய வசதிகளே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் விளைவாக, காவல்துறையினர் அவரை கைது செய்து குற்றவியல் நடத்தை குறித்து முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!