யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்குமாறு வலியுறுத்தல்!
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2024 இல் இராணுவச் சட்டத்தை அறிவித்து நாட்டையே குழப்பத்தில் ஆழ்தியமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கிளர்ச்சி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவரிடம் 11 மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர்கள் சர்வாதிகாரம் மற்றும் நீண்டகால ஆட்சியை இலக்காகக் கொண்ட அதிகார மோகத்தால் அவர் கிளர்ச்சியை தூண்டும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்படி காரணங்களுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
யூனின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஆட்சி கவிழ்ப்பு தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் மூன்றாவது தலைவராக மாறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





