பொங்கல் ரேஸில் ‘வா வாத்தியார்’.. எம்.ஜி.ஆர் ஆசியுடன் களம் இறங்கும் கார்த்தி!
நீண்ட இழுபறிக்குப் பிறகு, கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம் இந்த பொங்கல் (ஜனவரி 14, 2026) அன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் (MGR) தீவிர ரசிகராக நடித்துள்ளார். படத்தில் பல இடங்களில் எம்ஜிஆர் பற்றிய குறிப்புகளும் (References), அவரது பாடல்களும் இடம்பெற்றுள்ளன. “கேப்டன் விஜயகாந்த் போலவே, எம்ஜிஆரின் ஆசி இந்தப் படத்திற்கு இருக்கும்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி, இந்தப் படம் உருவாவதில் இருந்த தடைகளைத் தாண்டி, தற்போது ரிலீஸாவது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். “நம்பிக்கையும், உழைப்பும் இருந்தால் நிம்மதி தேடி வரும்” என அவர் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

தயாரிப்பு தரப்பில் இருந்த சுமார் ₹21 கோடி கடன் தொடர்பான சட்டச் சிக்கல்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட்டதை அடுத்து, படத்தின் ரிலீஸ் தடை நீக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படம் தள்ளிப்போனதால், அந்த இடத்தில் கார்த்தியின் “வா வாத்தியார்” களம் இறங்குகிறது. இது கார்த்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.






