புயல் கோரெட்டி – மரம் வீழ்ந்ததில் ஒருவர் பலி
இங்கிலாந்தின் கார்ன்வாலின் ஹெல்ஸ்டன் (Helston, Cornwall) அருகே மாவ்கன் (Mawgan) பகுதியில், புயல் கோரெட்டி (Goretti) காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகள், மரத்தை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புயல் காரணமாக இங்கிலாந்தின் தென்மேற்கில் 34,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.





