ஸ்டைலிஷ் லுக்கில் திவ்ய பாரதி
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கிளாமருடன் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார்.
இரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த திவ்யபாரதிக்கு ஒருகட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஆர்வம் காட்டி வருகிறார் திவ்யா.
இந்நிலையில் பேச்சுலர் பட நாயகி திவ்யாபாரதியின் அண்மைய இன்ஸ்டாகிராம் கிளிக்ஸ் இணையத்தில் வைரலாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.






