பொழுதுபோக்கு

தடைகளைத் தகர்த்த ‘பராசக்தி’! ஜனவரி 10-ல் திரையரங்குகளில் சீற்றம் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

#Parasakthi #Sivakarthikeyan #SudhaKongara #MadrasHighCourt #ParasakthiFromJan10 #SK25 #CinemaNews #TamilCinema #பராசக்தி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான “பராசக்தி” வெளியீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், இப்படம் வரும் ஜனவரி 10, 2026 அன்று திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து தான் எழுதிய ‘செம்மொழி’ என்ற கதையைத் திருடி, ‘பராசக்தி’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்திற்குத் தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார். அவரின் இந்த தீர்ப்பிற்கு அவர் கூறிய முக்கிய விடயங்கள் பின் வருமாறு:

ஆதாரமின்மை அதாவது கதை திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மனுதாரர் தரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

மற்றும் காலதாமதம் இந்த படத்தின் தயாரிப்பு குறித்து 2024-லேயே தெரிந்திருந்தும், பட வெளியீட்டிற்குச் சில நாட்களுக்கு மும்பு வழக்கு தொடர்ந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும் பொருளாதார இழப்பு அதாவது இந்தப்படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்குத் தடை விதித்தால் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆகவே இந்தப்படமானது ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் திகதி ரெட் ஜயண்ட் மூவீஸ் (Red Giant Movies) மூலம் இப்படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

AJ

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!