17 வருட சிறை தண்டனை – போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்!
ஊழல் வழக்கில் தனக்கும் மனைவி புஷ்ரா பீபிக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகுமாறு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 2022 இல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சவுதி அரேபியாவிடம் இருந்து பரிசு பெற்று ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடியாலா சிறையில் தனது வழக்கறிஞர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட அவர், தனது ஆதரவாளர்களிடம் போராட்டத்திற்கு தயாராகுமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.





