பசிபிக் கடற்பகுதியில் மற்றொரு தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்கா – 05 பேர் பலி!
கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று மற்றொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இதில் 05 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் ( Pete Hegseth) உத்தரவின் பேரில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்கவும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் ட்ரம்ப் நிர்வாகம் கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





