பைடனின் SAVE திட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை! மாணவர்கள் பாதிப்பு!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், 7.6 மில்லியன் கணக்கான மாணவர்கள் பெற்ற கடனை மீள செலுத்தும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டுவந்த SAVE திட்டத்தின் கீழ் மில்லியன் கணக்கான மாணவர்கள் கடன் பெற்ற நிலையில் அதனை திருப்பி செலுத்தும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மதிப்புமிக்க இந்த திட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் SAVE திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் ஒரு புதிய, சட்டப்பூர்வ திட்டத்தைக் கண்டுபிடித்து மீண்டும் பணம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




