சர்வதேச கடற்பகுதியில் கழுகு பார்வையுடன் காத்திருக்கும் அமெரிக்கா!
சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருள் படகு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவத்தினருக்கு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் உத்தரவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய போதைப்பொருளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் கப்பல் பயணிப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




