இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 6.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என்று திணைக்களம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





