சீனாவில் தொழிலாளர்கள் மீது மோதிய ரயில் – 11 பேர் பலி!
சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
ரயில்வே தொழிலாளர்கள் பூகம்பக் கண்டறிதல் கருவிகளை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய ரயில் வளையமைப்பை சீனா கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பயணங்களை ஈடுகின்றமை குறிப்பிடத்தக்கது.





