ஸ்பெயினில் அதிகரிக்கும் பாலின வன்முறையை எதிர்த்து மாட்ரிட்டில்(Madrid) மக்கள் பேரணி
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தன்று ஸ்பெயின்(Spain) முழுவதும் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக மாட்ரிட்டில்(Madrid) ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை 38 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பேரணியில் உயிரிழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், குறித்த பேரணியில் ஸ்பெயினின் சமத்துவ அமைச்சர் அனா ரெடோண்டோ(Ana Redondo) உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





