ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கிய இயக்குநர்…
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அப்படத்தில் இருந்து விலகுவதாக திடீரென அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து ரஜினி படத்தை இயக்க தனுஷ், ஆர்.ஜே.பாலாஜி, நிதிலன் சுவாமிநாதன் ஆகியோர் ரஜினியிடம் கதை சொன்னதாகவும் பேச்சு அடிபட்டது.
இந்த நிலையில், தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
இவர் இயக்கிய முதல் படமான பார்க்கிங் தேசிய விருதை வென்றிருந்தது. இதையடுத்து சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார். இதையடுத்து ரஜினியை சந்தித்து ராம்குமார் சொன்ன கதை அவருக்கு பிடித்துப் போனதால், ரஜினியும் ஓகே சொல்லிவிட்டாராம்.
பார்கிங் படத்தை இயக்க வெறும் 6 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கி இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன், தலைவரின் படத்தை இயக்க ரூ.10 கோடி சம்பளம் வழங்க இருக்கிறாராம்.
இதன்மூலம் இரண்டாம் படத்திலேயே 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய இயக்குநர் என்கிற சாதனையை படைத்திருக்கிறார் ராம்குமார்.





