“கேட்டால் அவரே கொடுத்து விடுவார்” இனி இப்படி செய்யாதீங்க….
அண்மைக் காலங்களாக புதிய படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது ட்ரென்டாகி விட்டது.
இதை ஆரம்பித்து வைத்தவர் நம்ம லோகி என்றும் கூறலாம். அவருடைய அனைத்து படங்களிலும் பழைய பாடல்கள் இருக்கும். அந்த பழைய பாடல்கள் இன்றை இளம் சமூகத்திரருக்கு மிகவும் பிடித்துவிடும்.
ஆனால் இவ்வாறு பழைய பாடல்களில் கைவைக்கும் போது கனவமாக இருக்க வேண்டும். காப்புரிமை பிரச்சனையும் கூடவே வரும்.
இளையராஜா இதற்கு பேர் போனவர். தன்னுடைய பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்களைத் தேஎ வக்கீல் நோட்டிஸ் அனுபபிவிடுவார்.
இவ்வாறு பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் மட்டும் இளையராஜா பாரபட்சமே பார்க்கமாட்டார்.
இந்த நிலையில் இளையராஜாவிடம் அனுமதி கேட்டாலே அவர் பாடல்களுக்கு காப்புரிமை கொடுத்து விடுவார் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் பாடல்களுக்கு காப்புரிமை தொடர்பாக கங்கை அமரன் கூறுகையில்,
“எங்களின் பாடல்களை அப்படியே எடுத்துப் போடுகிறவர்கள் காப்பிரைட்ஸ் கொடுத்துதான் ஆகவேண்டும். ஆனால், எங்களிடம் அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்றுதான் இளையராஜா கூறுகிறார். `இந்தப் படத்தில் இந்தப் பாடலைக் கொடுத்ததற்காக இளையராஜாவுக்கு நன்றி” என்று போட்டால் எல்லாம் சரியாகிவிடும். அவரிடம் கேட்டாலே அவர் கொடுத்து விடுவார்.
ஆனால், எங்களிடம் கேட்காமல் எடுத்துக் கொள்வதுதான் தவறு. நமக்குத் தேவை ஒரு `அனுமதி’. எங்களை மதிக்காமல், எடுத்துக் கொள்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.






