நிர்வாணக் காட்சியில் ஆண்ட்ரியா : என்ன காரணம்?
நடிகை ஆண்ட்ரியா தயாரித்து கவினுடன் இணைந்து நடித்த மாஸ்க் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகின்றது.
இதுவரை இப்படம் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா பாடவுள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா,
“பிசாசு – 2 திரைப்படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
“பிசாசு -2 கதையில் நான் நிர்வாணமாக நடிக்க வேண்டிய காட்சிகள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், படமாக்கியபோது மிஷ்கின் அதனை நீக்கிவிட்டார். சில கவர்ச்சியான காட்சிகள் இருந்தாலும் அவை நிர்வாணக்காட்சிகள் அல்ல. இந்த மாதிரியான காட்சியை வித்தியாசமான முறையில் எடுக்க வேண்டுமென மிஷ்கின் போன்ற இயக்குநர் கேட்டால், அவரின் நோக்கத்தை நான் நம்புவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.






