என்.பி.பி. அரசை கைவிட்டனரா புலம்பெயர் தமிழர்கள்?
புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாததாலேயே ஆளுங்கட்சியான ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் போராட்டம் வெடித்தது என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கிய அந்த குழு தற்போது விலகிச் சென்றது ஏன் எனவும் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ. நளிந்த ஜயதிஸ்ஸ,
“நீங்கள் டயஸ்போரா என சிறு குழுவைதான் விளக்கின்றீர்கள். டயஸ்போரா என்பது பரந்தப்பட்ட விடயம்.
லண்டனில் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும் டயஸ்போராதான். இலங்கைக்கு வெளியில் வாழ்ந்து கொண்டு நாட்டு நலன் பற்றி சந்திக்கும் அனைத்து இன மக்களும் டயஸ்போராக்களுக்குள் உள்ளடங்குகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பு எமக்கு உதவிதயதாக எங்கும் பதிவாகவில்லை.
புலிகளுக்கு சார்பான , அந்த நம்பிக்கையில் சிறு குழு இருக்கலாம். இவர்கள் இப்படியான நடவடிக்கையில் ஈடுபடலாம். அவர்கள் எமக்கு உதவினார்கள் எனக் கூறுவது தவறு.
திட்டமிட்ட அடிப்படையிலேயே இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.” – என்று குறிப்பிட்டார்.




