நடிப்பு அரக்கன் திவாகருக்கு மூன்று திருமணங்கள்?
பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கலந்துகொண்டு சுமார் 40 நாட்கள்வரை விளையாடினார்.
வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு இவர் மூன்று திருமணங்கள் செய்துகொண்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் திவாகர்.
“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான தகவல்களை சில யூடியூபர்கள் பரப்புகிறார்கள். நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். மூன்று பெண்களை எல்லாம் நான் திருமணம் செய்யவில்லை. இதற்கு மேல் என்னை பற்றி தவறான மற்றும் பொய்யான தகவல் வந்தால் அதை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.எனவே எனக்கு கெட்ட பெயரை பெற்றுத்தர இப்படி சிலர் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.






