இந்த வாரம் மக்கள் காப்பாற்றப்போவது யாரை?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. இறுதியாக கெமி வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் அடுத்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அந்த வகையில் சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேசன், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், அமித் பார்கவ், அரோரா, விஜே பார்வதி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் மனங்களைக் கவர்ந்து அதிக வாக்குகளைப் பெறுபவர் போட்டியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வார இறுதியில் அனுப்பப்படுவார்.
அடுத்து வெளியேறப்போவது யார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





