23 ஆண்டுகளுக்கு முன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகையின் வழக்கு
உயிரிழந்த பிரபல நடிகை பிரதியுஷா வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை பிரதியுஷா தனது காதலருடன் இணைந்து கடந்த 2002ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் காதலரான சித்தார்த் உயிர் தப்பிய நிலையில், பிரதியுஷா உயிரிழந்தார்.

இதனையடுத்து சித்தார்த்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் 2 ஆண்டுகளாக நீதிமன்றம் குறைத்தது.
இதனால் அதிருப்தி அடைந்த பிரதியுஷாவின் தாயார், கடந்த 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவர் தொடுத்த வழக்கில், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது இறப்பு திட்டமிடப்பட்ட கொலை என வாதிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால், கடந்த 23 ஆண்டுகளாக தொடரும் மர்மம், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






