ஆஸ்திரேலியாவில் மின் துண்டிப்பு – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஃபினா (Fina) சூறாவளி தாக்கியதை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது மணிக்கு 205 கிமீ (127 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபினா (Fina) சூறாவளி காரணமாக சுமார் 19,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாக முதலமைச்சர் லியா ஃபினோச்சியாரோ ( Lia Finocchiaro) தெரிவித்துள்ளார்.
மின்கம்பிகள் சேதமடைந்துள்ள நிலையில், டார்வினில் (Darwin) வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை டார்வின் சர்வதேச விமான நிலையம் நேற்று மூடப்பட்டதுடன், இன்று வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 8 times, 8 visits today)





