சிம்பு பட தயாரிப்பாளர் அதிரடியாக கைது.. அதிர்ச்சி தகவல்
இன்றை நவீன காலக்கட்டத்தில் சினிமா துறை முதற்கொண்டு பல இடங்களிலும் போதைப்பொருள் தலைவிரித்தாடுகின்றது.
பெரிய பெரிய தலைகளும் அவ்வப்போது கைது செய்யப்படுவது உண்டு. அப்போதுதான் “இவரா??” என்ற கேள்வி எழும்.
அந்த வகையில், சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஷர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக தியாகேஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஷர்புதீனுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து ஷர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமாவில் பலர் போதைப்பொருள் வியாபாரம், மற்றும் பாவித்த பேரில் கைது செய்யப்படுவது முதன்முறையல்ல. இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

(Visited 2 times, 2 visits today)




