ரவி மோகனின் வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்வில் அடுத்தடுத்து பல மாற்றங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்று தான் புதிதாக “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” ஒன்றை உருவாக்கினார்.
இந்த நிலையில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு விதித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் என்ற படத்தின் தலைப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்த “ப்ரோ கோட்” பெயருக்கு, தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால், அதை பயன்படுத்தக் கூடாது என, டெல்லியைச் சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் தரப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ப்ரோ கோட் தலைப்பை, தனது படத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுவதாக ரவி மோகன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் திகதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், அன்றையதினம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டார்.






