மம்மூட்டியின் ‘களம்காவல்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு
நடிகர் மம்மூட்டி வில்லனாக நடிக்கும் ‘களம்காவல்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியுள்ளார்.
மேலும், களம்காவல் படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.
க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், 27 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப் படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றது எனவும், புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு இன்று அறிவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)





