DNA-க்கு பயந்து தலைமறைவான ரங்கராஜ்?
சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த ஜாய் கிரிஸில்டா – ரங்கராஜ் பிரச்சினை தறபோது மீண்டும் வந்துவிட்டது.
குழந்தை தன்னுடையது என்று நிரூபனமாகி விட்டால் குழந்தைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில்,
DNA டெஸ்ட் எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் காணாமல் போய்விட்டாதாக ஜாய் நக்கலாக கூறியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்திருப்பது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
இந்நிலையில் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு வராமல் மாதம்பட்டி ரங்கராஜ் டிமிக்கி கொடுப்பதாக அவரது எதிர் தரப்பினர் சொல்ல ஆரம்பித்திருக்கும் நிலையில் ஜாய் கிரிஸில்டா நக்கலாக ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “யாராவது என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்தால் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்கள். டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து 15 நாட்கள் ஆகிவிட்டன. இப்போ எங்கே தலைமறைவா இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜே உங்களுக்கு தைரியமும், நேர்மையும் இருந்தால் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வாங்க” என்று அதிரடியாக அழைப்பு விடுத்திருக்கிறார்.






